ஏலகிரிமலையில் ஓடும் காரில் தீ; 3 பேர் உயிர் தப்பினர்

ஏலகிரிமலையில் ஓடும் காரில் தீ;  3 பேர் உயிர் தப்பினர்
X

தீப்பற்றி எரிந்த கார்.

ஏலகிரிமலையில் திடீரென கார் தீ விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சலாமாபாத் பகுதியை சேர்ந்த நயீம் அகமத் இவர் தோல் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் பக்ரீத் பண்டிகை விடுமுறை என்பதால் ஏலகிரிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது, மலைச் சாலையின் 9 வது கொண்டை ஊசி வளைவில் திடீரென காரின் முன் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரை நிறுத்தி பார்த்தபோது, திடீரென காரின் முன்பக்கத்தில் தீப்பற்றி எரிந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட அவர், காரில் இருந்த அனைவரும் பத்திரமாக இறக்கினார். இதனால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டன. தகவலின் பேரில், திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏலகிரி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!