ஜோலார்பேட்டை 10வது வார்டில் பாஜக மாவட்ட செயலாளருக்கு ஒரு வாக்கு கூட விழல

ஜோலார்பேட்டை 10வது வார்டில் பாஜக மாவட்ட செயலாளருக்கு  ஒரு வாக்கு கூட விழல
X

ஒரு வாக்கு கூட பெறாமல் தோல்வியடைந்த பாஜக மாவட்ட செயலாளர் அசோகன்

ஜோலார்பேட்டை நகராட்சி வார்டு எண் 10 ல் பாஜக சார்பில் போட்டியிட்ட மாவட்ட செயலாளர் அசோகன் ஒரு வாக்குகள் கூட பெறாமல் தோல்வி அடைந்தார்

தமிழகத்தில் நகர்புற தேர்தலில் ஜோலார்பேட்டை நகராட்சி 10 வார்டில் பிஜேபி கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தேர்தல் பொறுப்பாளருமான அசோகன் போட்டியிட்டார். அந்த வார்டில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட 6 கட்சியினர் போட்டியிட்டனர்.

ஜோலார்பேட்டை 18 வார்டுகளில் பதிவான வாக்குகள் 4 சுற்றுகளாக எண்ணப்பட்டன. அதில் பாஜக மாவட்ட செயலாளர் அசோகன் ஜீரோ வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். திமுகவைச் சேர்ந்த சிவகுமார் 845 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்

பிஜேபி சார்பில் போட்டியிட்ட மாவட்ட செயலாளர் அசோகன் ஒரு வாக்குகள் கூட பெறாமல் தோல்வி அடைந்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!