ஆம்பூர் அருகே முன்விரோதத்தில் இளைஞர் அடித்து கொலை : மர்ம நபர்கள் வெறிசெயல்

ஆம்பூர் அருகே முன்விரோதத்தில் இளைஞர் அடித்து கொலை : மர்ம நபர்கள் வெறிசெயல்
X

கொலை நடந்த வீடு

ஆம்பூர் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த  இளைஞரின் தலை மீது கல்லை போட்டு கொலை. முன் விரோத காரணமா? என போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சிவக்குமார் (வயது 35). இவருக்கு கௌரி என்ற மனைவியும் இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளன. சிவகுமார் வேலைக்கு செல்லாமல் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி, வழக்கு ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது . அதனால்,இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன் இவரை விட்டுப் பிரிந்து அருகில் உள்ள நாச்சார்குப்பம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு பெரியங்குப்பம் பகுதியிலுள்ள தனது வீட்டின் வெளியே திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த சிவகுமார் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். காலையில் சிவகுமாரின் தாய் ராஜேஸ்வரி கதவை திறந்து வெளியே வந்து போது சிவகுமார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தின் பேரில் கிராமிய போலீஸார் விரைந்து சென்ற சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவக்குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், முன்விரோத காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டாரா ? என போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி நேரில் சென்று விசாரணை நடத்தினார்

Tags

Next Story
ai marketing future