ஆம்பூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது: 10 பைக்குகள் பறிமுதல்

ஆம்பூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது: 10 பைக்குகள் பறிமுதல்
X

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் தாெடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஷமீல். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள்.

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருடிய இளைஞர் கைது. 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான உமராபாத், மிட்டாளம், வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம், சோலூர், சோமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போன நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் ஆம்பூர் தேவலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்த ஷமீல் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் முரணான பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். சம்பவம் குறித்து உமராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷமீல் அஹமத் என்பவரை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai future project