ஆம்பூர் பகுதிகளில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டுவந்த இளைஞர் கைது

ஆம்பூர் பகுதிகளில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டுவந்த இளைஞர் கைது
X

ஆம்பூர் பகுதிகளில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்த இளைஞருடன் போலீசார்.

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளையடித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியில் ஆம்பூர் நகர காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை செய்தனர்.

அப்போது இளைஞர் ஒருவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவரை கைது செய்து தீவிர விசாரணை செய்த காவல்துறையினர் வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியை சேர்ந்த சுகேல் என்பது தெரியவந்தது.

விசாரணையில், அவர் உமராபாத் மற்றும் ஆம்பூர் பகுதிகளில் வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடமிருந்து 10 சவரன் தங்க நகைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தை மீட்ட ஆம்பூர் நகர காவல் துறையினர் ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!