ஆம்பூரில் தோல் காலணி தொழிற்சாலை தொழிலாளி மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது

ஆம்பூரில் தோல் காலணி தொழிற்சாலை தொழிலாளி மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது
X

காதலித்த பெண்ணை திருமணம் செய்தவர் மீது ஆசிட் ஊற்றியதால் கைதான வாலிபர்

தான் காதலித்த பெண்ணை  திருமணம் செய்துகொள்ள இருந்ததால் ஆசிட் வீசியதாக காவல் நிலையத்தில் கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம்.நகர் அருகே உள்ள ஆயிஷா-பி நகர் பகுதியை சேர்ந்தவர் ஷமீல் அஹமத். இவர் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

கடந்த மாதம் 17 ஆம் தேதி தொழிற்சாலைக்கு சென்று மாலை வீடு திரும்பிய அவர் வீட்டின் அருகாமையில் நண்பர்களுடன் பேசுவதற்காக அப்பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த ஆசிட்டை ஷமீல் அஹமத் மீது வீசி விட்டு சென்றுள்ளார்.

உடனடியாக முகம் மற்றும் தோள்பட்டை பகுதியில் ஆசிட் விழுந்து படுகாயமடைந்த விழுந்த ஷமீல் அஹமதை அங்கிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 5 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தனர். இருப்பினும் 22 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்று முடிந்தது.

மேலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுபேர் அஹமது என்பவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை செய்தபோது, தான் காதலித்த உறவினர் பெண்ணை பெரியோர்கள் ஷமீல் அஹமது திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டதால், திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக பேர்ணம்பட்டு ஒர்க் ஷாப்பில் இருந்து கேன் மூலம் ஆசிட் வாங்கியதாக கூறினார். இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக பின்தொடர்ந்து பின்னர் 17ஆம் தேதி அவர் மீது வீசி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்து விட்ததாக காவல் துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

அதன்பேரில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!