மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: மலர்தூவி மரியாதை செலுத்திய வேலூர் எம்பி

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்:  மலர்தூவி மரியாதை செலுத்திய வேலூர் எம்பி
X

மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் வேலூர் எம்பி கதிர் ஆனந்த்

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு ஆம்பூரில் திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய வேலூர் எம்பி கதிர் ஆனந்த்

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் மொழியை காக்க நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஆம்பூரில் உள்ள வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார் கழக நிர்வாகிகள் பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் நகர செயலாளர் ஆறுமுகம், மாதனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story