ஆம்பூர் அருகே கன்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து

ஆம்பூர் அருகே  கன்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து
X
ஆம்பூர் அருகே மாங்காய் லோடு ஏற்றி சென்ற வேன், முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்து. வேன் ஓட்டுனர் காயம்.

திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு மாங்காய் லோடு ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த வேன், ஆம்பூர் அடுத்த சோலூர் மேம்பாலத்தின் மீது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை முந்திச் செல்ல முயற்சித்தது.

அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் ஓட்டுநர் சிவாஜி அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த ஓட்டுநர் சிவாஜியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#Instanews #Tamilnadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #Tirupathur #Ambur #Accident #திருப்பத்தூர் #ஆம்பூர் #வாகனவிபத்து

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்