ஆம்பூர் அருகே மாந்தோப்பில் இறந்து கிடந்த மயில்கள்: வனத்துறை விசாரணை

ஆம்பூர் அருகே மாந்தோப்பில் இறந்து கிடந்த மயில்கள்:  வனத்துறை விசாரணை
X

மாந்தோப்பில் மர்மமான முறையில் இறந்த மயில்கள்

ஆம்பூர் அருகே மாந்தோப்பில் இரண்டு மயில்கள் மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி துருகம் காப்புக்காடு மலை அடிவாரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. அதில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட மயில்கள் இரை தேடி வந்துள்ளன. அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு ஆண் மயில்கள் திடீரென மயங்கி இறந்துள்ளது.

இதனை அவ்வழியாக சென்ற பெண்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்த மயில்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் மயில்கள் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து மயில்கள் இறப்பு என்பது தொடர் கதையாகி வருகிறது தேசிய பறவையான மயில்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா