ஆம்பூர் அருகே சரக்கு ரயில் பழுது: ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம் 

ஆம்பூர் அருகே சரக்கு ரயில் பழுது:  ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம் 
X

லோகோ பைலட் மற்றும் ரயில்வே கார்ட் ஆகியோர் ரயிலில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்ய முயற்சி செய்தனர்

ஆம்பூர் அருகே சரக்கு ரயில் பழுதாகி நின்றதால் சென்னை பெங்களூரு மார்க்கத்தில் ரயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்றன

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரயில் நிலையம் அருகே ரேணிகுண்டாவில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 65 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயில் ஒன்று ஸ்டீல் பொருட்களை ஏற்றிகொண்டு விண்ணமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தபோது 2 பெட்டிகள் இடையே இணைக்கப்பட்டிருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டதால் திடீரென ரயில் நிறுத்தப்பட்டது.

உடனடியாக ரயிலில் இருந்த லோகோ பைலட் மற்றும் ரயில்வே கார்ட் ஆகியோர் ரயிலில் ஏற்பட்டுள்ள கோளாறு சரி செய்ய முயற்சி செய்தனர்.

பின்னர் 1 மணி நேரத்திற்கு பின்பு சரிசெய்யப்பட்டு மெதுவாக விண்ணமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று சரக்கு ரயிலை நிறுத்தினர் பின்னர் ஜோலார்பேட்டையில் இருந்து வரவழைக்கப்பட்ட பொறியாளர்கள் மூலம் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சென்னையில் பெங்களூரு மார்க்கத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சரக்கு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் காலதாமதமாக சென்றது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!