ஆம்பூரில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய தமுமுக

ஆம்பூரில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய தமுமுக
X

ஆம்பூரில் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய தமுமுகவினர்

ஆம்பூரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு 16 ஆக்சிஜன் சிலிண்டர்களை தமுமுகவினர் வழங்கினர்..

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகம் தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு தமுமுக சார்பில் 16 ஆக்சிஜன் சிலிண்டர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இனி இருக்காது என தெரிவித்துள்ளனர். கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக தானாக முன்வந்து தமுமுகவினர் ஆக்சிஜன் சிலிண்டர்களை தொடர்ந்து சுழற்சி முறையில் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!