ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி  3 பேர் உயிரிழப்பு
X

ஆம்பூர் அருகே நடந்த கார் விபத்தில் உருக்குலைந்த கார்

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு. நிச்சயதார்த்தம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது நடந்த சோகம்

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த கண்ணயர் (வயது 94), சென்னை நங்கநல்லூர் சேர்ந்த வேணுகோபால்(வயது 26) வசுந்தரா தேவி(வயது45) சந்திரமௌலி (வயது55) ஆகியோர் வேணுகோபாலுக்கு ஓசூர் பகுதியில் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஆம்பூர் அருகே செங்கிலி குப்பம் பகுதியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் காரில் பயணித்த 4 பேர் பலத்த காயங்களுடன் காரில் சிக்கி தவித்தனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் சிக்கிய 4 பேரையும் மீட்டனர். அப்போது நிகழ்விடத்திலேயே வேணுகோபால் மற்றும் கண்ணயர் இருவரும் உயிரிழந்தனர். மேலும் வசுந்தராதேவி மற்றும் சந்திரமவுலி ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பலனின்றி வசுந்தராதேவி மருத்துவமனையில் உயிரிழந்தார். பலத்த படுகாயமடைந்த சந்திரமௌலி மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!