ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
X

ஆம்பூர் அருகே பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட வீடு 

ஆம்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகைகள், ரூ 16 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை. போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் விஜய் குமார். இவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இவருடைய மனைவி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவரும் அருகிலுள்ள காலனி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இன்று மாலை விஜயகுமார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.16 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து விஜய் குமார் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடித்த சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!