/* */

ஆம்பூரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கான இடத்தினை எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான இடத்தினை எம்எல்ஏ வில்வநாதன் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

ஆம்பூரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கான இடத்தினை எம்எல்ஏ ஆய்வு
X

ஆம்பூரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான இடத்தினை எம்எல்ஏ வில்வநாதன் ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் தேர்தல் நேரத்தில், ஏழை எளிய குடிசையில் வசிக்கக்கூடிய 3 ஆயிரம் பேருக்கு வீடு கட்டித் தருவதாக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் வாக்குறுதி அளித்திருந்தார். அதனடிப்படையில் தமிழ் நாடு வீட்டுவசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை மனுவினை அளித்திருந்தார்.

இந்தநிலையில் இன்று ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் வருவாய் எல்லைக்குட்பட்ட பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் சுமார் 64 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்காக 6.2 ஏக்கர் பரப்பளவில் மூன்று அடுக்கு மாடியில் கட்டிடங்களில் முதல் கட்டமாக 528 குடியிருப்புகள் கட்டுவதற்கான இடத்தினை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கபாண்டியன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்

Updated On: 20 July 2021 4:13 PM GMT

Related News