மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கல்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கல்
X

ஆம்பூரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்களை ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி கோபிநாத் வழங்கினார்.

ஆம்பூரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி கோபிநாத் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு பகுதியில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் அதிமுக சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 கிலோ அரிசி, காய்கறி, மளிகை மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கினார்.

ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி கோபிநாத், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தேவலபுரம் வெங்கடேசன், அதிமுக வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் வெ.கோபிநாத் , ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி குபேந்திரன், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிமுக கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!