காதலன் உயிரிழந்ததால் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

காதலன் உயிரிழந்ததால் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
X

ஆம்பூர் தற்கொலை செய்து கொண்டவர்கள் 

ஆம்பூர் அருகே காதலன் உயிரிழந்ததால் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகள் 11ஆம் வகுப்பு மாணவி பிரியங்கா தேவி (வயது 16) இவர் இன்று காலை அதே பகுதியில் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிரியங்கா தேவி அதே பகுதியை சேர்ந்த எலெக்ட்ரிசியன் ரமணன் (வயது 21) என்பவரை ஒருவருடமாக காதலித்து வந்ததும், நேற்று செல்போனில் சண்டை போட்டு கொண்டதால் நேற்று இரவு ரமணன் அவரது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், அதனால், மனமுடைந்த நிலையில் இன்று காலை பிரியங்கா தேவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ரமணனின் சடலத்தை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கும் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த பிரியங்கா தேவி சடலத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!