ஆம்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை ரயில்வே போலீசார் விசாரணை

ஆம்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை ரயில்வே போலீசார் விசாரணை
X

மாணவன் உடலை கொட்டும் மழையில் உறவினர்களுடன் சேர்ந்து தூக்கி வந்த பெண் காவலர்

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடலை கொட்டும் மழையில் உறவினர்களுடன் சேர்ந்து தூக்கி வந்த பெண்காவலர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் இவரது மகன் கோகுல் (வயது 19) தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர் இன்று அவரது கிராமத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்று அமர்ந்து உள்ளார் திடீரென பெங்களூர் சென்னை மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் உடல் சிதைந்த நிலையில் இறந்த சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது திடீரென மழை வந்ததால் சடலத்தை அப்புறப்படுத்த தலைமை பெண் காவலர் உஷாராணி, சடலத்தை உறவினர்களுடன் சேர்ந்து ரயில்வே தண்டவாளத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தூக்கிக்கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் தோல்வியா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!