அரசு மருத்துவமனையில் எஸ்.பி ஆய்வு

அரசு மருத்துவமனையில் எஸ்.பி ஆய்வு
X

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இன்று மாவட்ட எஸ்.பி விஜயகுமார் ஆய்வு செய்தார்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் எஸ்.பி விஜயகுமார் திடீர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன மேலும் உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகின்றன. இதன் காரணமாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இன்று திடீர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை உள்ளவர்கள் எவ்வாறான சிகிச்சை அளிக்கப்படுகின்றன அவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளனவா, அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளனவா என்பதையும் கேட்டறிந்தார் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் புதிதாக கொரோனா சிறப்பு சிகிச்சை 100 படுக்கைகள் வசதிகள் கொண்ட மானிட்டரிங் அமையும் இடத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

டி.எஸ்.பி சரவணன், சிறப்பு தனிப் பிரிவு ஆய்வாளர் பழனி, மற்றும் மருத்துவர்கள், அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!