மழைநீரை அப்புறப்படுத்தாததால் பொதுமக்கள் சாலை மறியல்

மழைநீரை அப்புறப்படுத்தாததால் பொதுமக்கள் சாலை மறியல்
X

மழைநீரை அப்புறப்படுத்தாததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

ஆம்பூர் அருகே வீடுகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த யாரும் முன்வராததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சியில் ஸ்டார் சிட்டி திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை காரணமாக ஏரிகள் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனை அப்புறப்படுத்த அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆம்பூர் பேரணாம்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் விரைந்து வந்த உமராபாத் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் விரைவில் தேங்கியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது

இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!