/* */

ஆம்பூரில் தொழிற்சாலை வாகனங்களுக்கு அபராதம்

ஆம்பூரில் அதிக ஊழியர்களை ஏற்றி வந்த தொழிற்சாலை வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருவாய் துறையினர் நடவடிக்கை

HIGHLIGHTS

ஆம்பூரில் தொழிற்சாலை வாகனங்களுக்கு அபராதம்
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட தோல் மற்றும் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தது தற்போது தளர்வுகள் உடன் 50% சதவீத ஆட்களை கொண்டு தொழிற்சாலைகளில் நோய்தொற்று விதிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ளலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதைத்தொடர்ந்து தொழிற்சாலைக்கு பணியாட்களை கொண்டு செல்லும் வாகனத்தில் தனிமனித இடைவெளி பின்பற்றி ஆட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கொரானா நோய்தொற்று விதிமுறைகளை பின்பற்றாமல் தொழிற்சாலை வேன்களில் அதிக ஆட்களை கொண்டு செல்கின்றனர் எனப் புகார் எழுந்ததை தொடர்ந்து, காவல் துறையினரும் வருவாய் துறையினரும் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி வரும் வாகனத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதிகமான ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட வேன்களுக்கு 500 ரூபாய் அபராதமும் 15 ஆட்டோக்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும் தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்துகொண்டால் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

#Instanews #Tamilnadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #Tirupathur #Ambur #ShoeCompany #staffVan #rulesviolation #Fine #திருப்பத்தூர் #ஆம்பூர் #காலணிதொழிற்சாலை #பணியாளர்வாகனம் #விதிமீறல் #அபராதம்

Updated On: 10 Jun 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...