ஆம்பூர் அருகே 20 ஏக்கர் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆம்பூர் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் வருவாய் துறையினர்
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ஆம்பூர் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து ஆம்பூர் வட்டாட்சியர் பழனி ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து மண்டல தாசில்தார் குமரவேல், ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் சேகர் அடங்கிய குழுவினர் ஆம்பூர் உள்வட்டம் மின்னூர் பெரியங்குப்பம் விண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.
இதில் மின்னூர் ஊராட்சி பகுதியில் 7.38 ஏக்கர் உட்பட சுமார் 20 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.
மேலும் இந்த நடவடிக்கையின் போது நெல் பயிரிட்டிருந்த விவசாயிக்கு அறுவடைக் காலம் வரை அவகாசம் வழங்கி தொடர்ந்து பயிர் செய்ய தடை விதித்தும் வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu