ஆம்பூர் அருகே குடியிருப்புக்குள் அரிய வகையான தேவாங்கு பிடிபட்டது

ஆம்பூர் அருகே குடியிருப்புக்குள் அரிய வகையான தேவாங்கு பிடிபட்டது
X

ஆம்பூர் குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட அரிய வகை தேவாங்கு

ஆம்பூர் அருகே குடியிருப்புக்குள் சுற்றி திருந்த அரிய வகையான தேவாங்கை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் குடியிருப்பு பகுதியில் அரிய வகை விலங்கு ஒன்று சுற்றித் திரிவதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் ஆம்பூர் வனசரகர் இளங்கோவன், வனக் காப்பாளர்கள் பால்ராஜ் , சிவராமன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டபோது இது அரிய வகையான தேவாங்கு என தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அதனை லாவகமாக பிடித்து சாணாங்குப்பம் காப்பு காட்டில் பாதுகாப்பாக விட்டனர்

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு