ஆம்பூரில் கடந்த இரண்டு மணி நேரமாக கன மழை கொட்டித் தீர்த்தது

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளான கன்னிகாபுரம், சான்றோர்குப்பம், தேவலாபுரம், சாத்தம்பாக்கம், பெரியவரிகம், சின்னவரிகம், உமராபாத், கடம்பூர், நரியம்பட்டு, வடபுதுப்பட்டு, கீழ் முருங்கை ஆகிய பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது

இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது அங்கங்கே தாழ்வான பகுதிகளில் கழிவு நீரும் மழை நீரும் கலந்து சாலைகளில் சென்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த மழை காரணமாக நிலத்தடி நீர் உயரும், பாலாற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!