ஆம்பூரில் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி

ஆம்பூரில் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்து  வராததால் பொதுமக்கள் அவதி
X

பொதுமக்களின் கோரிக்கையை உடனே செய்து தந்தார் எம்எல்ஏ.

ஆம்பூரில் கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பஸ் நீண்ட நேரமாகியும் வராததால், எம்எல்ஏ நேரில் வந்து பஸ் வசதியை ஏற்பாடு செய்து தந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து உமராபாத், பேரணாம்பட்டு, மற்றும் பச்சகுப்பம், மேல்பட்டி, குடியாத்தம், ஆகிய ஊர்களுக்கு செல்லும் அரசு பேருந்து சுமார் ஒரு மணி நேரமாக பேருந்து இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து உடனடியாக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதனுக்கு பொதுமக்கள் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தனர்,

உடனடியாக சம்பந்தப்பட்ட ஆம்பூர் அரசு பேருந்து நிலையத்திற்கு வந்தார் எம்எல்ஏ. பின்னர் உரிய அதிகாரிகளிடம் போனில் பேசி சிறிது நேரத்தில் அரசு பஸ்சை ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு வரவைத்தார். பஸ் இல்லாமல் அவதியுடன் காத்து நின்ற பொதுமக்கள் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

Tags

Next Story
ai powered agriculture