வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலththai சீரமைக்கக்கோரி போராட்டம்

வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலththai சீரமைக்கக்கோரி போராட்டம்
X

தரைப்பாலத்தை சீரமைக்கக்கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாதனூர் வணிகர்கள்

பாலாறு குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதை சீரமைக்கக்கோரி மாதனூர்  பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் - உள்ளி இணைக்கக்கூடிய தரைப்பாலம் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது இதனால் குடியாத்தத்தில் இருந்து ஆம்பூர் மற்றும் ஆம்பூரில் இருந்து குடியாத்தம் செல்லக்கூடிய மாணவர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் 33 கிலோமீட்டர் மேலாக சுற்றி சொல்வதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்

தற்போது பாலாற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்து வருவதை தொடர்ந்து தற்காலிக பாலம் அமைத்து தரக்கோரி அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மாதனூர் பகுதியில் உள்ள வணிகர்கள் சுமார் 250க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தும், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பின்னர் விரைந்து வந்த காவல்துறை பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

Tags

Next Story
ai in future agriculture