ஆம்பூர் அருகே கள்ளச்சாராய பாக்கெட்டுகளை சாலையில் அழித்த காவல்துறை

ஆம்பூர் அருகே கள்ளச்சாராய பாக்கெட்டுகளை சாலையில் அழித்த காவல்துறை
X

கள்ளச்சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி சாலையில் அழித்த தனிப்படை காவல்துறையினர்

ஆம்பூர் அருகே கள்ளச்சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி சாலையில் அழித்த தனிப்படை காவல்துறையினர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கதவாளம் ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி அவர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்

அதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார் அதை தொடர்ந்து விரைந்து சென்ற உதவி ஆய்வாளர் பிரவீன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் பிடிக்க முற்படும் போது அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் அப்போது புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சாராய மூட்டைகளை கைப்பற்றி அதில் இருந்த சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்து அழித்தனர். இதனால் கிராம மக்கள் தற்பொழுது நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture