ஆம்பூர் அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது

ஆம்பூர் அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பாக்கெட்டுகள்

ஆம்பூர் அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்தியவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் வேலூரில் இருந்து ஓசூர் நோக்கி அரசு பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது மாதனூர் பகுதியில் அரசு பேருந்தில் டிக்கெட் பரிசோதகர் உமாபதி பேருந்தில் ஏறிய பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்துள்ளார்,

அப்போது பின் பக்க சீட்டில் அமர்ந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரை டிக்கெட் பரிசோதனை செய்துவிட்டு அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். அதற்கு அந்த இளைஞர் பையை சோதனை செய்ய அனுமதிக்க மறுத்ததால் ஆம்பூர் காவல் துறையினருக்கு டிக்கெட் பரிசோதகர் உமாபதி தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் இளைஞரை வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் மறைத்து வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் இளைஞர் வேலூர் பகுதியைச் சேர்ந்த பைரோஸ் என்பது தெரியவந்தது வேலூரில் இருந்து கஞ்சாவை பெங்களூருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதாக காவல் துறையினரிடம் ஒப்பு கொண்டதன் பேரில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story