ஆம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த மயில்: வனத்துறையிடம் ஒப்படைப்பு

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த மயில்: வனத்துறையிடம் ஒப்படைப்பு
X

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த மயிலை இளைஞர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வந்த மயிலை இளைஞர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அருகே உள்ள பகுதியில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் மயில் ஒன்று வந்துள்ளது.

இதனை நாய்கள் துரத்தி வந்ததால் இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் மயிலை காப்பாற்றி பின்னர் ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த வனத்துறையினர் மயிலை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டனர்.

வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் மற்றும் பறவைகள் ஊருக்குள் வருவது தொடர்கதையாகி வருகிறது. எனவே வனத்துறையினர் வன விலங்கு மற்றும் பறவைகளுக்கு உணவு, தண்ணீர் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story