ஆம்பூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

ஆம்பூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது
X

தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்களுடன் கைது செய்யப்பட்ட அகமது பாஷா

ஆம்பூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றவர் கைது செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பாக்குகள் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூர் காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்

இந்நிலையில் இன்று ஆம்பூர் பைபாஸ் சாலையில் இருந்து வெளியூர் செல்லும் சாலையில் தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனை பார்த்த காவல்துறையினர் அந்த நபரை துரத்திபிடித்து அந்த நபர் நிறுத்தி விட்டு சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது, மூட்டைகளில் சுமார் 45000 ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து ஆம்பூர் பகுதியில் வினியோகம் செய்து வந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து ஆம்பூர் சின்னமசூதி தெருவை சேர்ந்த அகமது பாஷா என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்