வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆம்பூரில் திறக்கப்பட்டது
ஆம்பூரில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை எம்பி கதிர் ஆனந்த் திறந்து வைத்தார்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் பல்வேறு நிர்வாக வசதிக்காக அதனை மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட நிலையில், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகள் வேலூர் நாடாளுமன்ற தொகுதியாக செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தொகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்கவும், மக்களின் மனுக்கள் பெற வசதியாக ஆம்பூரில் நாடாளுமன்ற அலுவலகம் அமைய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் இன்று ஆம்பூரில் நாடாளுமன்ற அலுவலகத்தை வேலூர் எம்பிகதிர் ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், மற்றும் ஏழை எளிய குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்புகள் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த கதிர் ஆனந்த், திருப்பத்தூர் மாவட்டத்தில் விரைவில் அரசு தொழிற்சாலை கொண்டு வரப்படும். அனைத்து நாட்களும் அலுவலகம் செயல்படும், வாரத்திற்கு 3 நாள் வருவேன் எனவும் கூறினார்.
வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் மேம்பாலம் வருவதற்கு வாய்ப்பில்லாததால் சுரங்கப்பாதை அமைய உள்ளதாகவும் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்க சாத்திய கூறுகள் இல்லாததால் ஒ.எ.ஆர் திரையரங்கம் எதிரில் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்
திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாவட்ட கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள். கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu