ஆம்பூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: எம்பி கதிர் ஆனந்த் துவக்கி வைத்தார்

ஆம்பூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: எம்பி கதிர் ஆனந்த் துவக்கி வைத்தார்
X

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை எம்பி கதிர் ஆனந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்

ஆம்பூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மிட்டாளம் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தினை, மருத்துவ வாகனத்தை கலெக்டர் அமர் குஷ்வாஹா, நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய கலெக்டர் அமர்குஷ்வாஹா, தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவையினை வழங்கிடும் ஒரு உன்னத திட்டமான மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ வசதியினை கொண்டு சேர்க்கும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தான் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக மக்களுக்கு தொடங்கியுள்ளார்கள்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 இலட்சத்து 72 ஆயிரத்து 492 மக்கள் தொகையில் 46ஆயிரத்து 612 நபர்களுக்கு தொற்றா நோய் உள்ள நோயாளிகளை கண்டறியப்பட்டுள்ளது. 1,031வீடு சார்ந்த நோய் ஆதரவு சேவைகள் மற்றும் பிசியோதெரபி மூலம் பயன்பெற உள்ளனர்கள். இதன் மூலம் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுகே மருத்துவ குழுவினர்கள் நேரடியாக சென்று தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கி, சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்கள். என கூறினார்

அதனைத் தொடர்ந்து ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 10 தாய்சேய் நலபெட்டகங்களை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!