ஆம்பூரில் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்

ஆம்பூரில் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார்
X
ஆம்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தவும் நோயில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

தற்போது 18 வயதிலிருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை ஆம்பூர் பகுதியில் இந்து மேல்நிலைப் பள்ளியில் செய்திருந்தனர். தடுப்பூசி முகாமை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி வில்வநாதன் தொடங்கி வைத்தார்.

இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். இதில் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் சுகாதாரத்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்