ஆம்பூரில் சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ வில்வநாதன்

ஆம்பூரில் சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ வில்வநாதன்
X

மூலிகை செடி வழங்கும் எம்எல்ஏ வில்வநாதன் 

ஆம்பூரில் ஸ்ரீ புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மைய சித்த மருத்துவ முகாமை எம்எல்ஏ வில்வநாதன் துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கஸ்பா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்ரீ புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாம் சித்த மருத்துவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து சித்த மருத்துவத்தின் பயன்கள் குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் மூலிகை, முக கவசம், மூலிகை மாத்திரைகள் பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் பொதுமக்கள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products