இலங்கைத் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் வேலு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னபள்ளிகுப்பம் மற்றும் மின்னூர் ஆகிய பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 949 பயனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் 10 கோடியே 3 லட்சத்து 52 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
இதில் மாதந்தோறும் வழங்கப்படும் உதவிதொகை, புதிய வீடு கட்டுதல், இலவச கேஸ் இணைப்பு, 5 வகையான 8 எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவை இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
விழாவின்போது சின்னபள்ளிகுப்பம் இலங்கை தமிழர் முகாமிலுள்ள வசிக்கும் ராஜேஸ்வரி என்ற இலங்கை பெண் தான் எழுதிய எடுத்து வந்த கவிதையை மேடையில் வாசித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென 1-வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரிதாவின் கணவர் முத்துக்குமரன், மேடையில் இருக்கும் மைக் முன்பாக வந்து தமிழக முதல்வரை குறித்து ஆவேசமாக பேசினார். பின்னர் கவிதை வாசித்த பெண்ணிற்கு அணிவிக்க சால்வை இல்லாததால் எனது கைக்குட்டை அணிவிக்கிறேன் என்று அணிவித்துவிட்டு திடீரென அரசு விழா மேடையில் அந்தப் பெண்ணின் காலில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu