இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் அமைச்சர் ஏ.வ வேலு ஆய்வு

இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் அமைச்சர் ஏ.வ வேலு  ஆய்வு
X

இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வேலு மற்றும் கலெக்டர் அமர் குஷ்வாஹா 

ஆம்பூர் அருகே இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சியில் இலங்கைத் தமிழர் சேர்ந்த 69 குடும்பங்கள் 225 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகளை கட்டி தர தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார் இதற்காக இடங்களில் அதிகாரிகள் தேர்வு செய்து வந்த நிலையில் 69 பேருக்கும் மாற்று இடம் தருவதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

இன்று அப்பகுதிக்கு ஆய்வு செய்ய வந்த அமைச்சர் எ.வ.வேலு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் அரசு அதிகாரிகளிடம், இடத்தை மாற்றி தர வேண்டாம் இதே இடத்தை தேர்வு செய்யுமாறு இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்து கேட்டுகொண்டனர்

மனுவைப் பெற்று கொண்டு அமைச்சர் உடனடியாக இதே இடத்தில் குடியிருப்பு பகுதி கட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவுவிட்டார். பின்னர் அங்கு இருந்த இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குழந்தைகள் படிக்க கூடிய அங்கன்வாடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த மாணவர்களிடம் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!