/* */

திருப்பத்தூரில் பல்வேறு சிகிச்சை மையங்களை அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தடுப்பூசி முகாம், கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

திருப்பத்தூரில் பல்வேறு சிகிச்சை மையங்களை அமைச்சர் திறந்து வைத்தார்
X

திருப்பத்தூரில் பல்வேறு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்தபோது திருப்பத்தூர் மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சோமலாபுரம் பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ஆம்பூர் வர்த்தக மைய கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து வர்த்தக மைய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் மருத்துவத்துறையின் கணக்குப்படி ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 11345, ஆக்ஸிஜன் வசதி இல்லாத படுக்கைகள் 17751, ஐ.சி.யு படுக்கைகள் 906 ஆக ஒட்டுமொத்தம் 30002 படுக்கைகள் காலியாக உள்ளது. இதுவே ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு படுக்கை கூட காலியாக இல்லை. தமிழகத்தில் ஒரு வார காலத்திற்குள் நோய் தொற்று மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. 30 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாக உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய மருத்துவமனைகளில் 435 படுக்கைகள் மட்டுமே இருந்தன. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் 1066 ஆக்சிஜன் வசதிகள் கூடிய படுக்கைகள் உள்ளது.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2532 பேருக்கு (SAWP TEST) பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 189 பேருக்கு மட்டுமே நோய்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 33 இடங்களில் 4500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.

பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் தமிழகத்தில் முதல் முறையாக 50 படுக்கைகள் கொண்ட கொரோனா யூனானி சிறப்பு சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி தொடங்கி வைத்து தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.

ஆய்வின் போது அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ்,வில்வநாதன், நல்லதம்பி உட்பட பலர் உடன் இருந்தனர்.

#Instanews #Tamilnadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #Tirupathur #ஆம்பூர் #வாணியம்பாடி #MinisterMa.Subramanian #treatmentCentre #Ambur #Vaniyambadi #திருப்பத்தூர் #அமைச்சர்மாசுப்பிரமணியன் #சிகிச்சை #மையங்கள் #stayhome #staysafe #treatment #corona #coronaspread

Updated On: 5 Jun 2021 8:59 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?