ஆம்பூர் அருகே மலை கிராம பகுதியில் மீண்டும் நில அதிர்வு

ஆம்பூர் அருகே மலை கிராம பகுதியில் மீண்டும் நில அதிர்வு
X

நிலஅதிர்வு உணரப்பட்ட அத்திமாகுலப்பள்ளி மலைகிராமம்

ஆம்பூர் அருகே மலை கிராம பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால்  கிராம மக்கள் பீதி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 29 ம் தேதி 3.5 ரிக்டர் அளவு நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் ஆம்பூர் அடுத்த வெங்கேட சமுத்திரம், அத்திமாகுலப்பள்ளி, ராலகொத்தூர், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த டி.டி மோட்டூர் கமலாபுரம், சிந்தகணவாய் ஆகிய மலைகிராம பகுதியில் சத்ததுடன் நில அதிர்வுகள் பகுதி மக்கள் உணரப்பட்டுள்ளனர்.

மேலும் அத்திமாகுலப்பள்ளி பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடர்ந்து மூன்று தினங்கள் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் அதே போன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இது குறித்து உரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai healthcare products