ஆம்பூர் அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கைது!

ஆம்பூர் அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கைது!
X

ஆம்பூர் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் கைதான ரோஹித்

ஆம்பூர் அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கைது! கார் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியில் இந்தியா 1 என்ற தனியார் ஏடிஎம் மையத்தில் கடந்த 27 ஆம் தேதி நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். ஆள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்

இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் ஏடிஎம் மேலாளர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிசிடிவி கேமராக்களையும் சேதப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து ஏடிஎம் மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆம்பூர் கிராமிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த ரோஹித் என்பவரை ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் குண்டூர் பகுதியில் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து காரை பறிமுதல் செய்து, இதில் வேறு யாராவது தொடர்பில் உள்ளார்களா, வேறு எங்கெங்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்