பிளாஸ்டிக் குப்பைகளை பாலாற்று வெள்ளத்தில் கொட்டும் மாதனூர் ஊராட்சி

பிளாஸ்டிக்  குப்பைகளை பாலாற்று வெள்ளத்தில் கொட்டும் மாதனூர் ஊராட்சி
X

பாலாற்று வெள்ளத்தில் குப்பைகளை கொட்டும் தூய்மை பணியாளர்கள்

மாதனூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை பாலாற்று வெள்ளத்தில் கொட்டும் அவலம். நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்று தண்ணீரை நம்பி 4 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மாதனூர் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டி குப்பைகள் மற்றும் கழிவுகளை சேகரிக்கப்பட்டு நேரடியாக பாலாற்றில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதை குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மாதனூர் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது இதில் ஊராட்சி சார்பில் சேகரிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் வாகனங்களில் கொண்டு வந்து பாலாற்றில் வெள்ளம் ஏற்படாத போது கரையோரம் கொட்டப்பட்டு வந்தது. மேலும் தற்போது பாலாற்றில் வெள்ளம் வந்ததால் அதை பயன்படுத்தி தற்போது தண்ணீரில் கொட்டி வருகின்றனர்.

மாதனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பாலாற்று பகுதியில் இருந்து விவசாயத்திற்கு மற்றும் குடிநீருக்கும் பயன் பெற்று வரும் நிலையில் குப்பைகளை கொட்டினால் தண்ணீர் மாசடை வாய்ப்புள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்..

எனவே பாலாற்றில் குப்பை கொட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!