/* */

ஆம்பூர் அருகே காவல்துறை சோதனைச்சாவடி மீது லாரி மோதி விபத்து

ஆம்பூர் அருகே காவல்துறை சோதனைச்சாவடி மீது லாரி மோதி விபத்து. நல்வாய்ப்பாக உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் உயிர்தப்பினர் 

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே காவல்துறை சோதனைச்சாவடி மீது லாரி மோதி விபத்து
X

ஆம்பூர் அருகே காவல்துறை சோதனை சாவடியில் மோதிய லாரி

தமிழகம் முழுவதும் கொரேனா நோய்தொற்று அதிகரித்து வந்த நிலையில் மாவட்ட எல்லைகள் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 லட்சம் மதிப்பில் சோதனை சாவடியை திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் அமைத்தனர்.

இதற்காக பிரத்தியோகமாக மேற்கூரை அமைக்கப்பட்டு ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மழை பெய்து கொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து பார்சல் ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு சென்று கொண்டிருத்த லாரி, மாதனூர் காவல்துறை சோதனைச்சாவடி வந்த போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இருந்த தடுப்புகள் உடைத்துகொண்டு சோதனைச்சாவடி மேற்கூரை மீது மோதி நின்றது, இதில் மேற்கூரை முற்றிலும் சேதமானது. அப்போது பணியில் இருந்த உதவியாளர் ஆனந்த் மற்றும் காவலர் தினேஷ் ஆகியோர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். மேற்கூரை மற்றும் காவலர் இருசக்கர வாகனம் உடைந்து சேதமானது.

பின்னர் ஓட்டுநர் வெங்கடேசனை கைது செய்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 2 Sep 2021 1:41 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!