தொழிலாளருக்கு வழங்கப்பட்ட காசோலை பணமில்லாமல் திரும்பி வந்ததால் போராட்டம் 

தொழிலாளருக்கு வழங்கப்பட்ட காசோலை பணமில்லாமல் திரும்பி வந்ததால் போராட்டம் 
X
காலணி தொழிற்சாலை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு ருக்கு வழங்கப்பட்ட காசோலையில் பணமில்லாமல் திரும்பி வந்ததால் போராட்டம் 

திருப்பத்தூர் மாவடடம் ஆம்பூர் அடுத்த கொமேஸ்வரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் (TAW ) 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இதில் 600க்கும் மேற்பட்டோரை ஆட்குறைப்பு செய்த தொழிற்சாலை நிர்வாகம் படிப்படியாக 2000 தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கியது.

இதனால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 10 கோடி பணத்தை 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொழிலாளர்களுக்கு 2020ஆம் ஆண்டு என்று மட்டும் பதிவு செய்து தேதி குறிப்பிடாமல் காசோலை வழங்கி வங்கியில் எடுத்து கொள்ளுமாறு கூறிவிட்டு தொழிற்சாலை மூடிவிட்டனர்.

ஆனால் காசோலையில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் மீண்டும் தொழிற்சாலை திறந்து பணிக்கு ஆட்களை சேர்ப்பதாக தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து தற்போது சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்று நிலுவையிலுள்ள தொகை வழங்குமாறு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சி தொழிலாளர் விடுதலை முன்னணி சங்கத்தினர் ஆதரவாக நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்