ஆம்பூர் அருகே ஜே.சி.பி எந்திரம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து

ஆம்பூர் அருகே ஜே.சி.பி எந்திரம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து
X

ஆம்பூர் அருகே ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட ஜெசிபி 

ஆம்பூர் அருகே ஜே.சி.பி எந்திரம் ஆற்றில் கவிழ்ந்த விபத்தல் அதில் இருந்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நரியம்பட்டில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் மலட்டாறு ஓடுகிறது. தொடர் கன மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் கடந்த 15 நாட்களாக தரை பாலம் முழுகி வெள்ளம் சென்று கொண்டு இருக்கின்றது. இதனால் நரியம்பட்டு குடியாத்தம் செல்லும் வாகனங்கள், பொதுமக்களுக்கு தரை பாலத்தை கடக்க போலீஸார் தடை விதித்து இருந்தனர்.

வெள்ளத்தின் காரணமாக ஆற்று படுகையில் உள்ள தென்னை மரங்கள் மற்றும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் வரப்பட்டு குப்பைகள் அனைத்தும் தரை பாலத்தில் சிக்கியதால் நீர் செல்ல தடை ஏற்பட்டது. ஆற்றில் நீர் சற்று குறைந்ததால் ஊராட்சி மன்ற சார்பில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பாலத்தின் மீது சிக்கி இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஜே.சி.பி இயந்திரம் ஆற்றின் வெள்ள நீரில் சிக்கி கவிழ்ந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. அப்போது ஜே.சி.பி இயந்திர ஓட்டுனர் உட்பட மூன்று பேர் நீரில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!