ஆம்பூர் பகுதியில் தனிமனித இடைவெளியின்றி பொருட்களை வாங்க கூடும் மக்கள்
ஆம்பூர் பகுதியில் தனிமனித இடைவெளியின்றி பொருட்களை வாங்க கூடும் மக்கள்
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிகம் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு சனி மற்றும் ஞாயிறு இரு நாள்கள் மட்டுமே காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் அனைத்தும் திறந்து பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லலாம் என அறிவித்திருந்தனர்.
மேலும் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதால், மருந்தகம் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை மட்டுமே திறக்கவும் அரசு அறிவித்து உள்ளது.
முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர். பொருட்களை வாங்கிச் செல்லும்போது மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu