ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குத்திக் கொலை

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குத்திக் கொலை
X

கொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கோவிந்தராஜ்

ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை அவரின் கடையின் அருகே குத்தி கொலை செய்த மர்ம நபர் தப்பியோட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய கொமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா இவரது கணவர் கோவிந்தராஜ் (வயது 40)

இவர் வீரவர் கோவில் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை ஜி.கே. எலக்ட்ரானிக் என்ற கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கடைக்கு வந்த மர்ம நபர் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடையின் அருகே உள்ள துரோபதி அம்மன் கோவில் வளாகத்திறகு அழைத்து சென்று திடீரென மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோவிந்தராஜ் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்

விரைந்து வந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் முன்விரோத காரணமா? அல்லது கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் செய்த கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!