ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் 2 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கன மழை

ஆம்பூர், வாணியம்பாடி பகுதியில் 2 மணி நேரமாக  கொட்டித் தீர்த்த கன மழை
X

கனமழையில் தேங்கி நிற்கும் மழைநீர்

ஆம்பூர், வாணியம்பாடி அதனை சுற்றியுள்ள பகுதியில் பரவலாக 2 மணி நேரமாக கன மழை கொட்டித் தீர்த்தது விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் அதன் சுற்றியுள்ள பெரியபேட்டை, செட்டியபணூர், காதர்பேட்டை, கிரிசமுத்திரம், மின்னூர், பெரியங்குப்பம், விண்ணமங்கலம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது அவ்வப்போது வெயிலும் அதிகரித்துக் காணப்பட்டது இந்த நிலையில் பிற்பகல் திடீரென இடியுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது

இந்த கனமழையின் காரணமாக வாணியம்பாடி, ஆம்பூர் அதன் சுற்றியுள்ள பகுதியில் பரவலாக 2 மணி நேரமாக கனமழை பெய்து மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது இதன்காரணமாக வாணியம்பாடி வார சந்தை பகுதியில் மழை நீரும் கழிவுநீர் தேங்கி சாலையில் நின்றதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வந்த மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.

Tags

Next Story