ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை
X

ஆம்பூரில் கனமழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதில் ஆம்பூர் நகரம் முழுவதும் பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் மிட்டாளம், தேவலாபுரம், வீராங்குப்பம், மலையாம்பட்டு, மேல்சான்றோர்குப்பம், கரும்பூர், வடசேரி, மாராப்பட்டு, உள்ளிட்ட பகுதிகளிலும் அதேபோல் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!