கால் டாக்ஸியில் சென்னைக்கு கடத்தப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

கால் டாக்ஸியில் சென்னைக்கு கடத்தப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
X

ஆம்பூர் அருகே கால் டாக்ஸியில் சென்னைக்கு கடத்தப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்கள். 

சென்னைக்கு சென்ற 2 கால்டாக்சிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது கடத்தி வந்த புகையிலைப் பொருள்கள்பிடிபட்டது

ஆம்பூர் அருகே கால் டாக்ஸியில் சென்னைக்கு கடத்தப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவையும், 2 கார்களையும் பறிமுதல் செய்து , கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் ,பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது. பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற 2 கால்டாக்சி வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அரசு தடை செய்யப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் குட்கா மற்றும் பான் மசாலா கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சித்திக் மற்றும் சென்னை அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் ஆகிய கால் டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!