ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை நெடுவில் திடீர் பள்ளம்.

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை நெடுவில் திடீர் பள்ளம்.
X

நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதி பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதி பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சாலையில் சென்றவர்கள் உடனடியாக பார்த்து நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் அளித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
marketing ai tools