குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகள்: சோகத்தில் விஷம் குடித்து இறந்த தந்தை

குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகள்: சோகத்தில் விஷம் குடித்து இறந்த தந்தை
X

குளத்தில் மூழ்கி இறந்த சிறுவர்கள்

ஆம்பூர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி இரு குழந்தைகள் தனது கண்முன்னே உயிரிழந்த துக்கம் தாங்காமல், தந்தையும் விஷம் குடித்து தற்கொலை

ஊத்தங்கரையைச் சேர்ந்த லோகேஸ்வரன் - மீனாட்சி தம்பதியினரின் ஹரிப்பிரியா என்ற மகளும், யஸ்வந்த் என்று மகனும் நேற்று குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற தந்தை முயற்சி செய்தும் முடியவில்லை.

தனது பிள்ளைகள் தனது கண்முன்னே உயிரிழந்த துக்கம் தாங்காமல், கதறித் துடித்த லோகேஸ்வரன் - மீனாட்சி தம்பதியர் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.

குழந்தைகளின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் இருந்து சற்று தொலைவில் உள்ள ரயில் நிலையத்திற்கு தனது மனைவி மீனாட்சியுடன் சென்ற லோகேஸ்வரன், குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து குடித்துள்ளார். பிறகு தனது மனைவி மீனாட்சிக்கும் கொடுத்தார். விஷம் கலந்த குளிர்பானத்தை மீனாட்சி குடிக்க முயன்ற போது கடைசி நேரத்தில் லோகேஸ்வரன் தட்டி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து மீனாட்சி சத்தம் போடவே லோகேஸ்வரனை மீட்ட பயணிகள், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்