ஆம்பூர் அருகே 12ம் வகுப்பு வரை படித்திருந்த போலி மருத்துவர் கைது

ஆம்பூர் அருகே 12ம் வகுப்பு வரை படித்திருந்த போலி மருத்துவர் கைது
X
ஆம்பூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு காவல்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, ரெட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்து மருந்துகள் மற்றும் மருத்துவம் பார்ப்பதற்காக வைத்திருந்த உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!